handicraft
Handicraft Products | ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் ஃபீட் டிரஸ்ட்; மீன் ஊறுகாய், அலங்காரம் பொருட்கள் என நான்கு வகையான பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளிகள்
 

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் ஃபீட் டிரஸ்ட். மீன் ஊறுகாய், அலங்காரம் பொருட்கள் என நான்கு வகையான பொருட்கள் தயாரித்து ஏற்றுமதி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் உள்ள அந்தோணியார்புரத்தில் அல்டிரின் என்பவர் மீன், நண்டு, போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். 15 வருடத்திற்கு முன்பு ஃபீட் என்ற டிரஸ்டினை உருவாக்கி மாற்றுத்திறனாளிகளை பணியில் சேர்க்க ஆர்வம் காட்டாத இக்காலத்தில் சேவை நோக்கத்தில் தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் உள்ள 20 மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து சுயதொழில் செய்து வருகிறார்.

இதில் நான்கு வகையான பொருட்களை தயாரிக்க இங்கு பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து தங்களுடைய டிரஸ்ட்லையே பணியில் அமர்த்தி மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள் சுயமாக சம்பாதித்து வருமானம் பெற வழிவகை செய்துள்ளார்.

ஃபீட் டிரஸ்ட் குறித்து நிறுவுனர் அல்டிரின் கூறுகையில்,  ராமேஸ்வரம் தீவில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் மீனவர்களின் கல்வி, பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் சேவை நோக்கத்தோடு ஃபீட் டிரஸ்ட் தொடங்கப்பட்டது. இதில் தீவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என 20 மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தி நான்கு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் ஒன்று இதயா என்ற பெயரில் நெத்திலிமீன், சூடைமீன், இறால் மீன் போன்றவற்றில் இருந்து ஊறுகாய் தயாரித்து உள்ளூர் முதல் வெளியூர் வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

கடலில் கிடைக்க கூடிய சிப்பிகள், சங்குகள் வைத்து அலங்கார கைவினை பொருள்கள் செய்து இங்குள்ள வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேங்காய் மூலம் எண்ணெய் உற்பத்தி மற்றும் பழைய பணியன் துணிகளில் இருந்து கால் மிதி மேட் போன்றவற்றினை தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்கிறோம்.  இதில் கிடைக்கும் வருமானத்தினை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.5,000 முதல் 6,000 வரையில் பிரித்து கொடுக்கப்படுகிறது. மேலும், அரசின் மாற்றுத்திறனாளி சலுகைகளையும் அவர்களுக்கு பெற்றுத்தருகிறோம் என்று கூறினார்.

மாற்றுத்திறனாளி ஆரோக்கிய ராணி தெரிவித்ததாவது,  மாற்றுத்திறனாளி என்பதால் வேலை எதுவும் கிடைக்காமல் மற்றவர்களை நம்பி வீட்டிலேயே முடங்கி இருந்த நான் 15 வருடத்திற்கு முன்பு இங்கு வந்து பணியில் சேர்ந்து ஒவ்வொன்றையும் செய்ய கற்றுக்கொண்டேன். இதில் கிடைக்கும் வருமானம் மூலம் தங்களையும் பார்த்து தங்களது குடும்பத்தையும் பார்ப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது என தெரிவித்தார்.

 நன்றி  news18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *