டி.என் அலர்ட் செயலி எப்படி பயன்படுத்துவது அதில் உள்ள அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழக அரசு மழை தொடர்பான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க டி.என் அலர்ட் (TN Alert ) என்ற பெயரில் பிரத்யேக செயலி உருவாக்கி உள்ளது. உங்க பகுதியில் எப்போது மழை வரும், வானிலை நிலவரம் என்ன உள்ளிட்ட தகவல்களை இந்த ஆப்பில் பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்து எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் போனில் ப்ளே ஸ்டோரில் இருந்து டி.என் அலர்ட் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். ஆப் உள்ளே செல்லும் போதே உங்கள் இருப்பிடத்தில் என்ன வானிலை நிலவரமோ அதை காண்பிக்கும். எந்த நேரத்தில் மழை பெய்யும், எவ்வளவு பெய்யும் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும்.
கீழே வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தகவல்கள் பி.டி.எப் வடிவில் கொடுக்கப்படும். மீனவர்களுக்கான அறிவிப்பு, அடுத்த 7 நாட்களுக்கான மழை அறிவிப்பு இருக்கும்.
அதற்கு கீழே எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்தது, முன்னெச்சரிக்கை அறிவிப்பு, அணைகளின் தற்போதை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாக வெள்ளம் பாதிக்க கூடிய வசதிப்பிடப் பகுதிகள் இருந்தால் அதுவும் தெரிவிக்கப்படும். மேலும் பேரிடர் புகார் என்ற ஆப்ஷனில் மழை நீர் பாதிப்பு, வெள்ளம் தொடர்பான புகார்களை அதில் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்வர்.
மேலும் சென்னை பகுதிக்கு என பிரத்யேக ஆப்ஷன் உள்ளது. அதில் நிகழ் நேர மழை, வெள்ள நிலவரம் குறித்து அறியலாம். முன்னறிப்பாக கொடுக்கப்படுகிறது. சென்னையில் பகுதி வாரியாக வானிலை நிலவரத்தை அறியலாம்.
வானிலை முன்னறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல் மற்றும் ECMWF (European midrange forecast) நிறுவனத்தின் உடைய தகவலும் கொடுக்கப்படுகிறது. அதில் 4 நாட்களுக்கான மழை, வானிலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி indianexpress