முல்தான்: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் அணி சுமார் 1338 நாட்களுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் வெற்றி பெற்று இருக்கிறது. இதை அடுத்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? என்று பார்க்கலாம்.
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான ஒன்பதாவது இடத்திலிருந்து எட்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான் அணி 25.92 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது.
பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி 2025 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் தொடர்கிறது. இங்கிலாந்து அணி 43.05 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. இங்கிலாந்து அணியாலும், பாகிஸ்தான் அணியாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாது. எனவே, இந்த அணிகளின் வெற்றி, தோல்விகளால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
தற்போது இந்தியா, நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனதால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தாலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்தை இழக்காது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தால், இந்திய அணியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படலாம்.
Nandri mykhel