இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் சீனா உதவி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சீனாவை போல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை செய்ய துருக்கியே நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் செய்யப்படும் என்று துருக்கியே அறிவித்துள்ளதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நம் நாட்டுக்கும், அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் பிரச்சனை இருக்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை செல்வதோடு, நம் நாட்டுக்கு சொந்தமான காஷ்மீரை உரிமை கொண்டாடி வருகிறது. இது தான் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

அதேபோல் நம் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையேயும் மோதல் போக்கு இருக்கிறது. இதனால் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு அதிகளவில் நிதி உதவி, கடனுதவி செய்கிறது. மேலும் ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. பாகிஸ்தானில் தற்போது பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. இதனை சாதகமாக்கி சீனா, அந்த நாட்டுடன் நெருக்கம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் – சீனாவின் இந்த நெருக்கம் என்பது நம் நாட்டுக்கு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இருநாடுகளும் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிப்பது தான். இதற்கிடையே தான் தற்போது நம் நாட்டுக்கு துரோகம் செய்ய துருக்கியே (பழைய பெயர் துருக்கி) தயாராகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தும் பணியை துருக்கியே கையில் எடுக்கிறது. இதுதொடர்பாக துருக்கியே நாட்டின் அதிபர் ரெஹாப் தையிப் எர்டோகன் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் பாதுகாப்பு துறையின் பல்வேறு பிரிவு மற்றும் செக்டாருக்கு தேவையான உதவிகளை செய்ய தாராக உள்ளோம். பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த உதவி செய்யப்பட உள்ளது. இதற்காக துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்கள், பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட உள்ளது” என்றார்.

மேலும் துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை சார்ந்த கம்பெனி பாகிஸ்தானில் உற்பத்தி தொடங்குவதற்கான வசதியை ஏற்படுத்த உள்ளது. அதாவது துருக்கி நாட்டின் பாதுகாப்பு துறை நிறுவனமாக ரெப்கான் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் துருக்கியேவின் தலைநகர் இஸ்தான்புல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் அதன் புதிய கிளை தான் பாகிஸ்தானில் அமைய உள்ளது. இந்த நிறுவனம் என்பது பாகிஸ்தானில் 155 மில்லி மீட்டர் பீரங்கிகளை தயாரிக்க ஆலையை தொடங்க உள்ளது. அதேபோல் பாகிஸ்தானில் வெடிப்பொருள் பாதுகாக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் யூனிட்டுகள் வகை வெடிப்பொருட்களை சேமித்து வைக்க முடியும். முன்னதாக இதுதொடர்பான ஒப்பந்தம் என்பது துருக்கியே மற்றும் அமெரிக்கா இடையே நடந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி 155 மில்லி மீட்டர் பீரங்கிக்கான குண்டு தயாரிக்கும் ஆலை என்பது அமெரிக்காவின் டெக்சாஸில் அமைக்கப்பட உள்ளது.

அந்த வரிசையில் தற்போது துருக்கியே, பாகிஸ்தானுடனும் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. துருக்கியே – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தம் என்பது துருக்கியேவின் ரெப்கான் மற்றும் பாகிஸ்தானின் வா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இடையே நடந்துள்ளது. பாகிஸ்தானின் வா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் என்பது அந்த நாட்டின் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், குண்டுகள், மிலிட்டரி கிரேட் ஹார்ட்வேர் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கி வருகிறது. இதற்கிடையே தான் இருநிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் துருக்கியேயிடம் இருந்து அதிக ராணுவ உதவிகளை பெற முடியும். இது உண்மையில் இந்தியாவுக்கு புதிய தலைவலியாக பார்க்கப்படுகிறது.

Nandri oneindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *