பீகார் தலைநகர் பாட்னாவை, புது டெல்லிக்கு இணைக்கும் புதிய ரயில், அக்.30ஆம் தேதி காலை 8:25 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 994 கிமீ தூரத்தை இரவு 8 மணிக்குள் அதாவது, 11 மணி 30 நிமிடங்களில் தனது இலக்கை அடைய திட்டமிடப்பட்டது.
தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்னதாக, புது டெல்லி – பாட்னா இடையே இந்தியாவின் மிக நீளமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே துவக்கியது.
நாட்டின் விரிவடைந்து வரும் அதிவேக ரயில் நெட்வொர்க்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்னதாக, இந்தியாவின் மிக நீளமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே கொடியசைத்து துவக்கி வைத்தது.
பீகார் தலைநகர் பாட்னாவை, புது டெல்லிக்கு இணைக்கும் புதிய ரயில், அக்.30ஆம் தேதி காலை 8:25 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, 994 கிமீ தூரத்தை இரவு 8 மணிக்குள் அதாவது, 11 மணி 30 நிமிடங்களில் தனது இலக்கை அடைய திட்டமிடப்பட்டது.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கூற்றுப்படி, சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், அர்ரா, பக்சர், பண்டிட் தீன் தயாள் உபாத்யாய், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். புது டெல்லி – பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு விரைவான மற்றும் ஆடம்பரமான பயண அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.
இந்த ரயில் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் இருந்து பாட்னாவிற்கும், திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பாட்னாவிலிருந்து டெல்லிக்கும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பாட்னாவில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு டெல்லி சென்றடையும் என மின்ட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிகளுக்கு ஸ்லீப்பர் கிளாஸ் வழங்கப்படவில்லை, மாறாக இதில் ஃசேர் கார் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனினும் டெல்லி – பாட்னா இடையேயான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஸ்லீப்பர் கோச் வசதியை இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
டெல்லி – பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண கட்டணம்:
புது டெல்லி – பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஏசி சேர் காருக்கு ரூ.2,575 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் காருக்கு ரூ.4,655 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை, நவம்பர் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இருப்பினும், பாட்னாவிலிருந்து டெல்லிக்கு திரும்பும் ரயில் நவம்பர் 2, 4 மற்றும் 7ஆம் தேதிகளில் கிடைக்கும்.
முன்னதாக, மிக நீளமான வந்தே பாரத் ரயில் புது டெல்லி மற்றும் வாரணாசி இடையேயான 771 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடந்து சென்றது. இது தவிர, இந்திய ரயில்வே சமீபத்தில் லக்னோவில் இருந்து பீகாரின் சாப்ரா சந்திப்புக்கு மற்றொரு வந்தே பாரத் ரயிலைத் தொடங்கியது, இதனால் பயணிகள் தீபாவளி மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்திற்கு எளிதாகவும், வசதியாகவும் செல்ல முடிந்தது.
ரயில் எண் 02270 லக்னோவில் இருந்து பிற்பகல் 2:15 மணிக்கு புறப்பட்டு, இரவு 9:30 மணிக்கு சாப்ராவை அடைந்து, சுல்தான்பூர், வாரணாசி, காஜிபூர், பல்லியா, சுரேமன்பூர் மற்றும் இறுதியாக சாப்ராவில் நிற்கிறது. இந்த ரயில் வாரத்தின் ஆறு நாட்கள் இயங்கும். செவ்வாய் கிழமை மட்டும் எந்த சேவையும் இல்லை.
Nandri news18