இந்தியன் 2 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் நகைச்சுவை நடிகர் விவேக் இணைந்து நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் கமல் மற்றும் விவேக் இருவரும் முதன் முதலில் இணைந்து நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தினை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளார்.
கதை
தமிழகத்தில் சமூக ஆர்வலராக இருக்கும் சித்தார்த் தனது மனைவி ரகுல் ப்ரீத்சிங்-யுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக இணையத்தளத்தில் ஒரு யூ -டூப் சேனல் ஒன்றினை நிறுவி அரசியலில் நடக்கும் ஊழல் மற்றும் அரசியல் அராஜகத்தை பற்றி எடுத்துரைக்கிறார். இதனால் இவருக்கு பல மிரட்டல்கள் வருகின்றது. இதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சித்தார்த் பலரால் தாக்க படுகிறார்.
ஒரு நாள் இவரின் யூ டூப் வீடியோ-வை பற்றி அறியும் வெளிநாட்டில் இருக்கும் சேனாதிபதி (கமல்ஹாசன்) இந்திய வருகிறார். இவரின் மனைவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தும் இவர், பின்னர் சித்தார்த்-யை சந்திக்கிறார். இவரால் இந்தியாவில் நடக்கும் அராஜகத்தை கண்டு கொதிக்கிறார் கமல்.
சித்தார்த்-யிடம் இருந்து ஊழல் செய்த அரசியல்வாதிகளின் பட்டியலை பெற்று, சேனாதிபதியின் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். இவருக்கு சித்தார்த் மற்றும் மர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வால் உதவி செய்கின்றனர்.
அரசியல்வாதிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் கொல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியடையும் காவல் துறையினர், இதனை சேனாதிபதி-தான் செய்கிறார் என்று அறிந்து இவரை பிடிக்க முயற்சிகள் எடுக்கின்றனர். இவர்களிடம் இருந்து சேனாதிபதி தப்பித்தாரா? என்பதே படத்தின் கதை.
இத்திரைப்படத்தின் கதை இவ்வாறு இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதிகாரப்பூர்வமானது இல்லை.
திரைப்படத்தின் தகவல்கள்
ஜனவரி 18 முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும் இத்திரைப்படத்தினை முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக இயக்கவுள்ளார் இயக்குனர் ஷங்கர். இத்திரைப்படத்தினை நடித்ததும் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக கமல் ஹாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார், ஆகையால் இந்தியன் 2 கமலின் கடைசி படமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் வயதான தோற்றத்தை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு சென்னையில் படப்பிடிப்பை தொடங்கினர் ஷங்கர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு கமலின் வயதான தோற்றம் திருப்தி அளிக்கவில்லை என்று கமலின் வயதான தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.
இதனை மறுத்த லைக்கா படக்குழுவினர், இச்செய்திகள் ஆதாரமற்றது என்று முற்றுப்புள்ளி வைத்து, சென்னையில் ஜெனரல் மருத்துவமனை அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் படப்பிடிப்புகள் நடந்த நிலையில், ஸ்டூடியோ மற்றும் பல அரங்குகள் அமைக்க பட்டிருக்கின்றன என்ற தகவல்களை லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தினை நிறுத்தியுள்ளார் படக்குழுவினர். மே மாதம் 23-ம் நாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறியுள்ளனர் படக்குழுவினர்.
சிலம்பரசன் அதிரடி நீக்கம்
இப்படத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவருக்கு தான் ராகுல் ப்ரீத் சிங் ஜோடி என கூறப்படுகிறது. இவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடிக்கிறாராம். இந்த கதாபாத்திரத்திற்காக அஜய் தேவ்கன், அபிஷேக்பச்சன் மற்றும் அக்ஷய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மறுக்கவே வித்யூத் ஜம்வால் நடிக்கிறாராம்.
இதனை தொடர்ந்து 2019- ஜூலை மாதம் இத்திரைப்படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் சிலரை மாற்றி இத்திரைப்படம் 2019 – ஆகஸ்ட் 19-ல் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் 2019 ஆகஸ்ட் தொடக்கத்திலையே தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சமூகவலைத்தள பக்கங்களில் சூட்டிங்கில் இருந்து ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.