Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பற்றி காணலாம்.
பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ள 300 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர்-2 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
வங்கி அதிகாரிகள் (Local Bank Officers)
மொத்தம் 300 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் 160 பணியிடங்கள் நிரப்பப்படும்.
மொத்த பணியிடங்கள் – 300
கல்வித் தகுதி விவரம்:
இதற்கு விண்ண
ப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க, 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு இரண்டு ஆண்டுகள் PROBATION காலம் உண்டு. அதன் பிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவு செய்யப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர்,PWBD ஆகியோர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணபிப்பது எப்படி?
https://www.indianbank.in/ – என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.09.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.indianbank.in/wp-content/uploads/2024/08/Detailed– advertisement-on-Recruitment-of-Local-Bank-Officer-2024.pdf – என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
நன்றி abplive