Apple AirPods Pro 2 :
இதற்கான அதிகாரபூர்வ அனுமதியை வழங்கியிருக்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அசோசியேஷன் (FDA – Food and Drug Association). இது மருத்துவர் பரிந்துரை இல்லாமலே பயன்படுத்தும் கருவியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மொபைலிலிருந்து பாடல்கள், பாட்காஸ்ட், வீடியோக்கள் பார்ப்பது முதல் கால் பேசுவது வரை ஏர்பாட்ஸ்கள் பயன்படுவது வழக்கம். 2019-ம் ஆண்டு சுற்றுப்புற சத்தங்களைக் குறைக்கும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுவரப்பட்டது.
தற்போது மொபைலைத் தாண்டி பயனர்களின் சுற்றுப்புறத்தில் உள்ள சத்தங்களைக் (பிறர் பேசுவது, வாகன சத்தம் போன்ற சத்தங்கள்) கடத்தும் சாஃப்ட்வேர் அப்டேட்டைக் கொண்டுவருகிறது ஆப்பிள் நிறுவனம்.
இதனால் குறைந்த மற்றும் மிதமான செவித்திறன் குறைபாடு கொண்டவர்கள் பயனடைவர். இதை 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
அமெரிக்காவில் செவித்திறன் குறைபாடு பொதுவான பிரச்னையாக வளர்ந்திருக்கிறது. 3 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஒரே மாதிரியான காதுகேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2050-க்குள் சுமார் 250 கோடி பேருக்குக் குறிப்பிட்ட அளவில் செவித்திறன் குறைபாடு இருக்கும் என் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவுடன் உலகம் முழுவதும் உள்ள 100 நாடுகளில் இந்த சாஃப்ட்வேர் அப்டேட் வழங்கப்படும். இது கேட்கும் திறனை அதிகரிக்கும் கருவி பயன்பாட்டை எளிதாக்குவதாக FDA இயக்குநர் மிச்செல் டார்வர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 -வில் அறிமுகப்படுத்தப்படும் சாஃப்ட்வேரை ஆப்பிள் மொபைல் மூலம் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்.
நீண்ட நேரம் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது செவித்திறனுக்குத் தீங்கு விளைவுக்கும். அப்படி தீங்கு ஏற்படும்பட்சத்தில் அதற்கு உதவவும் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய அப்டேட் குறித்த உங்கள் கருத்துகளை, கீழே கமென்ட்டில் பதிவிடுங்கள்!