ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே, ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம், பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார்..
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டொனால்டு டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய – அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன், டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், நாட்டிற்கு சேவை செய்யவும், AIயில் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கியவுடன் அதன் CEO-வாக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nandri news18