அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெறப்போவது யார்? அதிபர் அரியணையை அலங்கரிக்கப் போவது யார் என்பது குறித்து பிரபல தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் கணித்திருப்பது பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

கருத்துக்கணிப்புகளும் மாறி மாறி இருவருக்கும் சாதகமாக வந்த வண்ணம் உள்ளன. இதனால் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் பிரபல வரலாற்றாசிரியரான ஆலன் லிச்ட்மேன். “தேர்தல் நாஸ்ட்ராடாமஸ் ” என்று அழைக்கப்படும் அமெரிக்க வரலாற்றாசிரியர், கடந்த பத்து அமெரிக்க அதிபர் தேர்தல்களில் ஒன்பது பேரை துல்லியமாக கணித்துள்ளார் ஆலன் லிக்ட்மேன்.

ஆலன் லிச்ட்மேனின் கணிப்பு வழக்கமான கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளைக் காட்டிலும் 1981 இல் அவர் உருவாக்கிய “13 Keys” தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த 13 Keys-களில் பதவி, இடைக்கால ஆதாயங்கள், மூன்றாம் தரப்பு வேட்பாளர்கள் மற்றும் பல அரசியல் மற்றும் பொருளாதார அளவீடுகள் போன்ற காரணிகள் இடம்பெற்றுள்ளன.

ஆலன் லிச்ட்மேன் தனது புவி இயற்பியல் நண்பரான விளாடிமிர் கெய்லிஸ்-போரோக்குடன் இணைந்து இந்த முறையை உருவாக்கினார். பதவிக்காலம், இடைக்கால ஆதாயங்கள், மூன்றாம் தரப்பு வேட்பாளர்கள், குறுகிய கால பொருளாதாரம், நீண்ட கால பொருளாதாரம், சமூக அமைதியின்மை, வெள்ளை மாளிகை ஊழல், பதவியில் உள்ள மற்றும் சவாலான கவர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கியது.

இதன் அடிப்படையில் 2024 அதிபர் ரேஸில், ஜனநாயகக்கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் தனக்கு ஆதரவாக இந்த எட்டு Key-களை வைத்திருப்பதாக லிச்ட்மேன் தெரிவித்துள்ளார். இது அவரது வெற்றியை உறுதிப்படுத்த போதுமானது என்றும் வரலாற்றாசிரியரான ஆலன் லிச்ட்மேன் கூறிள்ளார். “கமலா ஹாரிஸ் 13 Key-களில் எட்டில் நல்லவர், எனவே வெள்ளை மாளிகையின் Key-கள் அவரிடம் உள்ளன” என்று லிச்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

2016 இல் டொனால்ட் டிரம்பின் எதிர்பாராத வெற்றியைப் பற்றிய துல்லியமான கணிப்புக்காக பெரும் புகழ்பெற்றவர் இந்த ஆலன் லிச்ட்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக தற்போதைய அவரது கணிப்பும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி samayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *