அப்பளம் அதிகம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கு தான் என்றும், அளவோடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை என்றும் கூறப்படுகிறது.
அப்பளம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு. அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் அப்பளத்தில் கொழுப்பு அதிகம் என்பதும், எண்ணெயில் அப்பளங்கள் வறுத்து எடுக்கப்படுவதால் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். இது உடல் எடையை அதிகரித்து, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அப்பளத்தில் சோடியம் அதிகமாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்பளத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறாமல் போக வழிவகுக்கும்.
எனவே, அப்பளத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அதை மிதமாக சாப்பிடுவது நல்லது. அப்பளத்திற்கு பதிலாக உருளைக்கிழங்கு அல்லது காய்கறி சிப்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம்.
நன்றி webdunia