சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நெருங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் ரிடென்ஷன் பட்டியல் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் அதிகளவிலான இந்திய வீரர்களை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனால் பெரும்பாலான அணிகள் தரப்பில் அதிகளவிலான இந்திய வீரர்களை தக்க வைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் கிடைப்பதே அரிதான விஷயமாக தான் இருக்கும். வெளிநாட்டு வீரர்களை எளிதாக சிறிய தொகைக்கு வாங்க முடியும் என்பதால், அதற்கேற்ப மெகா ஏலத்திற்கான திட்டங்கள் செய்யப்படும். அந்த வகையில் சிஎஸ்கே அணி தரப்பில் 5 வீரர்களை ரிடென்ஷன் செய்துவிட்டு, ஒரேயொரு ஆர்டிஎம் வாய்ப்புடன் மெகா ஏலத்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. முதல் வீரராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.14 கோடி இலங்கை வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவை ரிடெய்ன் செய்யவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அதிரடி வீரர் சிவம் துபேவை ரூ.11 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜாவை ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அன்-கேப்ட் வீரராக தோனியை ரூ.4 கோடிக்கும், தீபக் சஹரை மீண்டும் ரூ.14 கோடிக்கும் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் கடந்த மெகா ஏலத்தின் போதே தீபக் சஹர் ரூ.14 கோடிக்கு தான் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். இதனால் மீண்டும் அவர் ரூ.14 கோடிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் பதிரானா, சிவம் துபே உள்ளிட்டோர் நிச்சயம் ரூ.15 கோடிக்கு அதிகமாக செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை என்று ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.
நன்றி mykhel