annauniversity

Anna University Special Arrear Exam 2024 : அரியர் தேர்வுகளை எழுதாமல் டிகிரியை இழந்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் தொலைத்தூரக் கல்வியில் படித்த மாணவர்கள் அரியர் தேர்வுகளையை எழுதி டிகிரி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகள் முன்பு அரியர் வைத்தவர்கள் கூட இந்த வாய்ப்பு பயன்படுத்திக் கொண்டு டிகிரியை பெற முடியும்.

Anna University Special Arrear Exam Announcement : அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் தொலைத்தூரக் கல்வியில் படித்து அரியர் வைத்த மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்தவர்கள் கூட இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் விதிமுறைகள் படி, ஒருவர் டிகிரி முடித்த 3 ஆண்டுகளுக்குள் அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், பெற்ற டிகிரி ரத்து செய்யப்படும். இப்படி, அரியர் எழுதாமல் டிகிரியை இழந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துக்கொண்டு மீண்டும் தேர்வெழுதி டிகிரியை பெறலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு டிகிரியை பெறமுடியும்.

அரியர் வைத்த மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு :

மேல் குறிப்பிட்ட நிலையில், டிகிரி ரத்து செய்யப்பட்டவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வு இறுதி வாய்ப்பு என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு நவம்பர்/டிசம்பர் 2024 மற்றும் ஏப்ரல்/மே 2025 ஆகிய கல்வி ஆண்டில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அரியர் தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் https://coe1.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 30.08.2024ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்கு 18.09.2024ஆம் தேதி மாலை 4 மணி வரை பெறப்படும். மேலும், கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்விற்கான கட்டணம் விவரம் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு அரியர் எழுத ஒரு தேர்விற்கு ரூ.5,000 கட்டணமாக ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். மேலும், கூடுதலாக ஒவ்வொரு தாளுக்கான தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். தேர்விற்கான கால அட்டவணை, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையம் ஆகிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

2001- 2002 கல்வி ஆண்டில் படித்தவர்களுக்கு தனி அறிவிப்பு :

இதுபோன்று, 2001 – 2002 கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கீழ் முதல் மற்றும் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகளை எழுதி, மூன்றாம் செமஸ்டர் முதல் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் எழுதியவர்களும் இந்த சிறப்பு அரியர் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தேர்விற்கான விண்ணப்பங்களை https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, தேர்விற்கான கட்டணத்தை டிடி மூலம் செலுத்தி தபால் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுபாடு அலுவலகத்திற்கு 25.09.2024ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இதுகுறித்த விவரங்களை இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

 

நன்றி samayam TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *